search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினேஷ் போகட்"

    • வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
    • காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

    வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

    வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

    தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.

    வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், அவரது காவியமான மன உறுதியும், விளையாட்டு திறனும் இந்தியாவின் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது.

    எதிர்காலத்தில் வினேஷ் போகட்டிற்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×