search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை நீக்கம்"

    • விதியை ரத்து செய்ய முடிவு.
    • சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனை கூட்டம்

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு புதிய விதிமுறை ஒன்றை அரசு கொண்டு வந்தது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

    அது மட்டுமின்றி வெளி மாநிலங்களில் அரசு வேலைகளில் ஈடுபடுவது, சில அரசு சலுகைகளை பெறவும் தடை செய்யப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள தனிநபர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×