என் மலர்
நீங்கள் தேடியது "பதக்க பட்டியல்"
- ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
- கடைசிப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்கா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர்.
ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு சீனா இடையே கடும் போட்டியை தந்தது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்க பட்டியல் விவரம் வருமாறு:
40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.
20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.
18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் பிடித்துள்ளது.
16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 62-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.
- கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது.
கிறிஸ்டோபர் பெய்லி, வெரோன் நார்வுட், புரூஸ் டெட்மான், ராய் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 54.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.
இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 2 நிமிடம் 55.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
போஸ்ட்வானா அணிக்கு வெள்ளியும் (2 நிமிடம் 54.53 வினாடி), இங்கிலாந்து அணிக்கு (2 நிமிடம் 55.83 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.
பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த அணி பந்த தூரத்தை 3 நிமிடம் 15.17 வினாடியில் கடந்தது. நெதர்லாந்து 3 நிமிடம் 19.50 வினாடியில் கடந்து வெள்ளியும், இங்கிலாந்து 3 நிமிடம் 19.72 வினடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51. 29 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 3 நிமிடம் 53.11 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெய்த் கிபியெ கான் தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் உலக சாதனையாளாராகவும் உள்ளார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை வீராங்கனை ஜெசிகா ஹல் 3 நிமிடம் 52.56 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜியா பெல் 3 நிமிடம் 52.61 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் இம்மானுவேல் வன்யோனி 1 நிமிடம் 41. 19 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். கனடாவை சேர்ந்த மார்கோ அரோப் 1 நிமிடம் 41.20 வினாடியில் கடந்து வெள்ளியும், அல்ஜீரியா வீரர் டிஜ்மெல் செட் ஜாட்டி 1 நிமிடம் 41.50 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நியூசிலாந்து வீரர் கெர்ஹமிஸ் 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஷெல்பைக்கு வெள்ளியும், கத்தாரை சேர்ந்த பார்சிமுக்கு வெண்கலமும் கிடைத்தன.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நார்வேக்கு தங்கம் கிடைத்து. அந்நாட்டை சேர்ந்த ஜேக்கப் இன்ஜெப்ரிஸ்டன் பந்தய தூரத்தை 13 நிமிடம் 13.66 வினாடியில் கடந்தார். ரொனால்டு கெமோய்க்கு வெள்ளியும் (கென்யா, 13 நிமிடம் 15.04 வினாடி), கிராண்ட் பிஷ்சருக்கு (அமெரிக்கா, 13 நிமிடம் 15.13 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, செக்குடியரசு அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மசாய் ரஸ்சல் 12.33 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
பிரான்சை சேர்ந்த சைரனா சம்பா வெள்ளி பதக்கமும் (12.34 வினாடி), போர்டோரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கேமாச்சோ (12.36 வினாடி) வெண்கலமும் பெற்றனர்.
- ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
- இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது பதக்க பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்திலும், 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளது.
இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 59-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.