search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ல் த கா சை ஆ"

    • ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளனர்.
    • இந்த படத்தில் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

    திரை உலக வரலாற்றில் முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் "ல் த கா சை ஆ." சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை கொண்டிருக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சதா நாடார் நாயகனாக நடித்து, இயக்கித் தயாரித்திருக்கிறார். அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும்.


     

    படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசும் போது, "எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் 'ல் தகா சைஆ."

    "நானும் என் மனைவியும் மோனிகா செலேனா இணைந்து இதில் பணியாற்றினோம். என் காதல் மனைவி இருவருமே கதாநாயகன் நாயகியாக நடிக்கிறோம் கதாநாயகனாக நானும் , கதாநாயகியாக என் மனைவி மோனிகா செலேனாவும் நடித்திருக்கிறோம். நாங்களே கூட்டாக இயக்கிக் தயாரிக்கிறோம்."

    "இதில் எங்களைத் தவிர ஏராளமான கலைஞர்கள் நடித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் காதல் மனைவியுடன் இருக்கும் ஒருவனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறான் என்பதை ஒரு முழுப் படமாக சுவையான திரைக்கதையுடன் உருவாக்கி இருக்கிறோம்."

    "இதற்கான படப்பிடிப்பை ஊட்டி ,ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், ஏற்காடு, பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, கோவா போன்ற இடங்களில் நடத்தி முடித்துள்ளோம். குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இப்படம் பார்ப்பவர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×