என் மலர்
நீங்கள் தேடியது "கங்கை ஆறு"
- 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
- கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்தது
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கங்கை நதி நீர் 'ஏ' முதல் 'ஈ' வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
- ஹரித்துவார் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி நதி நீர் 'ஏ'(A) முதல் 'ஈ'(E) வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஏ என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.
அதே சமயம் ஈ என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி' வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.