search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டார்பக்ஸ்"

    • கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
    • சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது.

    பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து தேநீர் விநியோகம் செய்யும் பணியில் மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த தினம் மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதை துளியும் எதிர்பார்க்காத மைக்கேல் அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பார்சல் சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது. இதில் மைக்கேல் இடுப்பின் கீழ் பகுதி தொடையின் உள்பகுதி மற்றும் ஆண்குறி உள்ளிட்டவற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு நேர்ந்த கதியை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

    "ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக எரியும் சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார். இதனால் அது மைக்கேலுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரே நொடியில் அவரின் மடியில் உடனடியாக விழுந்தது," என்று மைக்கேல் தரப்பு வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.

    மேலும், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்," என்றும் வழக்கறிஞர் கூறினார்.

    இந்த தீர்ப்பு குறித்து ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன் கூறும் போது, நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது என்றும், அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

    • பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்.
    • 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும்.

    ஸ்டார்பக்ஸ் உலகின் பிரபல காபி நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் ஏற்கனவே இருந்து சிஇஓ-வை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது 50 வயதான பிரையன் நிக்கோலை புதிய சிஇஓ-வாக நியமித்துள்ளது.

    நிக்கோல் தினமும் 1,600 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ரெயிலில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய தேவையில்லை. இவருக்கென கார்ப்பரேட் ஜெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த மாதத்தில் இருந்து புதிய சிஇஓ-வாக பதவி ஏற்க உள்ளார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நிறுவனத்தின் தலைநகர் சியாட்டில் உள்ளது. கலிபோர்னியாவின் அவரது வீட்டில் இருந்து ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 1600 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவர் வேலை செய்வதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும். 23 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருடாந்திர பங்கு பெறக்கூடிய தகுதியை பெறுவார்.

    பிரையன் நிக்கோல் வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பது இது முதல் முறையல்லை. இதற்கு முன்னதாக சிபோட்டில் சிஇஓ-வாக இருக்கும்போதும் இதேபோன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சிபொட்டில் தலைமை அலுவலகம் கொலராடோவில் இருந்தது, நிக்கோல் 15 நிமிடத்தில் கார் மூலம் சென்றடைய முடியும். ஆனால், மெக்சிகன் பாஸ் புட் நிறுவனம் தலைமை அலுவலகத்தை கலிபோர்னியாவுக்கு அவரை நியமனம் செய்த மூன்று மாதத்திலேயே மாற்றியது.

    ×