search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாபர் இந்தியா லிமிடெட்"

    • கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.
    • உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

    வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×