search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் அகற்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
    • தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் படுத்து கிடந்தது. இதனைக் கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்தனர். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×