search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சலுகை"

    • சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
    • சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    பிறகு, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நானே பதக்கம் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள்.

    பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும்.

    இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது.

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    காவல்துறையினரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருகிறோம்.

    காவல்துறையை நவீனமயமாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் மகளிருக்கு வாயப்பு அளித்தது கருணாநிதி தான்.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    ×