search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷட்மேன் இஸ்லாம்"

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி 240 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்கதேசம் முதல் இன்னிங்சில் இன்னும் 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    ×