என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாம் உலகப் போர்"

    • உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'

    ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.

    இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,

    'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

    • உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
    • உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது.

    கியேவ்:

    ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில்,

    ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

    இதனால் "2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னாள் உள்ளனர். உக்ரைனில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். ரஷியா- உக்ரைன் போரில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த பிப்ரவரியில் ராணுவத் தளபதியாக இருந்த ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும், ஜலுஷ்னியின் வளர்ந்து வரும் புகழ் அவரை ஜெலென்ஸ்கிக்கு அரசியல் போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நான் அதிபராக இருந்திருந்தால் இந்த காசா போரே நடந்திருக்காது.
    • அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதத்தில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.

    இன்று அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நேற்று கேப்பிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அங்கு டிரம்ப் பேசியதாவது, 

    நமது நாட்டை சரியான பாதையில் கட்டமைக்க வேண்டும். நாளை சூரியன் மறையும் நேரத்தில், நமது எல்லைகள் மீதான படையெடுப்பு நிறுத்தப்படும். நமது எல்லைகளை தொடர்ந்து பாதுகாப்போம். அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன்.

    அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றுவோம்.

    மத்திய கிழக்கில் அமைதிக்கான முதல் படியாக நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்துள்ளோம். கடந்த நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது 3 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நான் அதிபராக இருந்திருந்தால் இந்த காசா போரே நடந்திருக்காது.

     

    நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், ஜோ பைடன் அதிபராக இருந்து சாதித்ததை விட, அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதத்தில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.

    உக்ரைனில் நடைபெற்று வரும் போரையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் நீடிக்கும் குழப்பத்தை தீர்த்து வைப்பேன். 3-ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் என்று பேசியுள்ளார்.

    ×