என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதி சங்கரர்"
- நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
- இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.
நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார்.
கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.
ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.
பாடல்கள்
1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
- அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.
பவானிகோவில்
அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பத்ரிநாத்கோவில்
ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதிகள்
ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.
மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தை புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.
- ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
- இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.
சங்கராச்சாரியர் மடம்
ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது. இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது.
பத்ரிநாத்கோவில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
நரசிம்மர்கோவில்
பனிக்காலத்தில் பத்ரிநாத்கோவில் மூடப்படும் போது, கோவிலிலுள்ள முக்கிய தெய்வச்சிலைகளை தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோவிலினுள் வைத்து வழிபடுவர்.
தபோவனம்
ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.
- அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார்.
- ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம்ந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும்.
இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத்கோவில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.
சமயச் சிறப்புகள்
அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார். ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
பத்ரிநாத்கோவில், குரு கோவிந்த்கோவில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.
- சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
- இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.
துவாரகை மடம்
துவாரகை மடம் அல்லது துவாரகை பீடம் , இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், இன்றைய தேவபூமி துவாரகை மாவட்டத்தின் கடற்கரை நகரான துவாரகையில், ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட அத்வைத மடமாகும்.
சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.
கோவர்தன மடம்
கோவர்தன மடம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், புரி நகரத்தில் அமைந்துள்ளது. புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு தொடர்புடைய கோவர்தன மடம், ஆதிசங்கரர் கி. பி., 820இல் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று.
ரிக் வேதத்தை முதன்மைபடுத்த, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்ட கோவர்தன மடத்தின் முதல் மடாதிபதியாக ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் பொறுப்பேற்றார்.
பைரவர் மற்றும் பைரவியுடன், இம்மடத்தில் பெருமாள் மற்றும் சிவ பெருமான் பூஜிக்கப்படுகிறார்.
- யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.
- இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.
சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம்.
யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.
இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.
மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.
- விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
- சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.
அத்வைத சாரத்தை ஈஸ்வரனே ஆதிசங்கரருக்குப் போதித்ததாய் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன், நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் "விலகி நில். எங்களுக்குப் போக வழிவிடு" என்று சொன்னார்.
புலையன் கேட்டான். "யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா?
உடலுக்குள் இருக்கும் என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே.
அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான்.
ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக முடியும்?"
அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது.
"தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்"
உடனே புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் "மணீஷ பஞ்சகம்" என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.
இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது.
விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.
ரமண மகரிஷி மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரும் அத்வைத மார்க்கத்தில் பயணித்தவர்களே.
அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை!
- பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது.
- உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.
பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது.
பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன.
பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.
பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.
அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம்.
அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம்.
அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன.
ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.
ஒரு காலிப் பானையை குளத்தில் மூழ்க வைத்தால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா?
பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா?
பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.
- உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.
- அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன.
அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது.
உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.
அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான்.
நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.
இதை சில உதாரணங்கள் மூலம் சொன்னால் நன்றாக விளங்கும்.
திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம்.
வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா?
திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?
எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே அல்லவா?
அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே அல்லவா?
அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.
- கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே.
- அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.
வேதாந்த தத்துவ விளக்கங்கள் எல்லாம் மெத்தப் படித்த பண்டிதர்களுக்குத் தான் விளங்கும் என்ற அபிப்பிராயம் பல ஆன்மிகவாதிகளுக்கு இருக்கிறது.
ஆனால் அந்த தத்துவங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளும் போது தான் ஆன்மிகம் அறிவார்ந்ததாக அமைகிறது.
அவை புரியாத வரை ஆன்மிகம் கண்மூடித்தனமான பின்பற்றுதலாகவே மாறி விடுகிறது என்பதே உண்மை.
நம் பாரத நாட்டைப் பொருத்த வரை மற்ற பல நாடுகள் உருவாகும் முன்பே நம் முன்னோர்களின் ஆன்மிக அறிவு சிகரங்களை எட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
அந்தந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்ந்த ஆன்மிக தத்துவ சிந்தனைகள் பெரியோர்களால் சிந்திக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட மிக முக்கிய வேதாந்த தத்துவங்களையும், அவற்றை உபதேசித்த மகான்களையும், உபதேசிக்கப்பட்ட காலத்தின் தன்மையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அப்படிப் பார்த்தால் மட்டுமே அந்த தத்துவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முதலில் ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம் பார்ப்போம்.
அத்வைதம் என்றால் சம்ஸ்கிருதத்தில் இரண்டு என்று பொருள். அத்வைதம் என்றால் அ+த்வைதம், அதாவது இரண்டில்லாதது என்று பொருள்.
அத்வைதம் நம் உபநிடதங்களின் ஞான சாராம்சம் என்று சொல்லலாம்.
அந்த சாராம்சத்தை மறந்து விட்டு ஒரு கால கட்டத்தில் பாரத மக்கள் உலக வாழ்க்கை சுகங்களுக்காகவும், செல்வங்களிற்காகவும் வேண்டி சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.
அவற்றை மறுத்து கௌதம புத்தர் உபதேசித்த கருத்துகள் பிரபலமாகி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பின்பற்றப்பட ஆரம்பித்தன.
அப்படிப்பட்ட காலத்தில், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஆதிசங்கரர்.
கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே.
அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.
அதனால் அவரை "கௌதம புத்தரின் இன்னொரு நகல்" என்று வைதீகர்கள் கடுமையாக விமரிசித்தனர்.
ஆனால் கண்மூடித்தனமான சடங்குகள், சம்பிரதாயங்களை கௌதம புத்தரைப் போலவே ஆதிசங்கரரும் எதிர்த்தாரே ஒழிய மற்றபடி கௌதம புத்தரைப் போல அல்லாமல் கடவுள் ஒன்றே என்ற வேதாந்தப் பேருண்மையைப் போதித்து இந்திய ஞான மார்க்கத்தை மீட்டு நெறிப்படுத்தியவர் ஆதிசங்கரர்.
இனி அவர் உபதேசித்த அத்வைத சாராம்சத்தைப் பார்ப்போம்.
- இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்
- சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.
* இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்
* சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.
* பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார்.
* ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.
* காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் 'மனீஷா பஞ்சகம்' என்ற 5 சுலோகங்களை இயற்றினார்.
* ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது.
* அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.
* யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து,அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீ சக்கர பூஜையாகும்.
* ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீ சக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.
* ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு " வித்யோபாகனை" என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.
* ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
* சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை " சக்ரராஜம்" என்று போற்றுகிறார்கள்.
* யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.
* தென்இந்தியாவில் ஸ்ரீ சக்கர வழிபாடுகள் பரசுராம கல்ப நூல் வழிப்படி நடத்தப்படுகிறது.
* ஆதி சங்கரர் நிறுவியுள்ள ஸ்ரீ சக்கரங்களை முறைப்படி வழிபடுபவர்கள் யோகமும், குரு பலனும் கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறமுடியும்.
- காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.
- விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.
காஞ்சியில் சங்கரர் வாழ்ந்ததை நினைவூட்டும் வகையில் காஞ்சியைச் சுற்றிலும் உள்ள கோவில்களிலும், காஞ்சி மாநகரின் உட்புறமுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் சங்கராச்சாரியார் உருவத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள், கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள், சிலா பிம்பங்கள் போன்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
1. காமாட்சி கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வடகிழக்கே சற்று உயரத்திலுள்ள மண்டபத்தில் சங்கரரது ஜீவகளையுள்ளது போல் ஒரு சிற்பம்.
2. யாத்ரோத்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி அம்மன்களின் சிற்றாலயங்களிலும் செதுக்கு வேலைகொண்ட சங்கரரின் உருவங்கள்.
3. குமர கோஷ்டத்தில் சங்கரரது சிற்பம்.
4. காஞ்சியின் அண்மையில் சிவலிங்க மேட்டுக்கோவிலில் சங்கரர் சிற்பச் சிலை.
5.காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.
6.விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.
7. காஞ்சி வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் சங்கரர் சிற்பச் சிலை.
8. வைணவர்களின் தலை சிறந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் என்பது உலகறிந்த உண்மை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சங்கரர் சிற்பம் சந்திர புஷ்கரணி கரையில் உள்ளது.
9. சென்னையருகில் திருவொற்றியூர் சங்கர மடத்தில் பூஜை செய்யும் புனித இடத்தில் உள்ள சுவர் ஒன்றில் தனது நான்கு பிரதான சிஷ்யர்களோடு சங்கராச்சாரியார் அமர்ந்திருக்கும் காட்சி.
10. விஷ்ணு காஞ்சி வரதராஜர் கோவிலுக்குள் பெருந்தேவி அம்பாள் கர்ப்ப கிரகத்திற்குள் நுழையும் வழிக்கு அருகிலுள்ள பெரிய கற்றூண்களைத் தாங்கும் உத்திரத்தை ஆசனமாக கொண்ட உட்கார்ந்த நிலையிலுள்ள வியாசர் கற்சிலையும் அண்மையிலேயே சிறு கற்றூண்கள் தாங்கும் சிறிய உத்திரத்தின் மீது சங்கரர் கை கூப்பி நிற்கும் நிலையிலும் சிற்பம் உள்ளது.
செவிலிமேடு, பாப்பான் சாவடி, பூவிருந்தமல்லி போன்ற ஊர்களின் ஆலயங்களில் சங்கரரை நினைவூட்டும் சான்றுகள் எண்ணற்றவை காணக்கிடக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்