என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் பிரகாஷ்ராஜ்"

    • சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

    2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம் என பிரகாஷ்ராஜ் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    ஜெய்ஷாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டாலான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

    ×