search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள திரைத்துறை"

    • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
    • இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    கேரள திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இயக்குநர் ரஞ்சித் நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் என பலர் இந்த புகார்களில் சிக்கியுள்ளனர். நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர்.

    அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது, சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது திரைத்துறையிலும் உள்ளது, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் முன் உள்ளது.

    இதுகுறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்குப்பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் [பவர்ஹவுஸ்] என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும், தீர்வுகளையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    ×