என் மலர்
நீங்கள் தேடியது "திருவள்ளுவர் கலாச்சார மையம்"
- முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழரின் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியை கெடுத்துள்ளது.
தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகெங்கும் வாழும் தமிழர்களை மொழி, கலாசாரம், வரலாற்று ரீதியாக இணைக்கிற பாலமாக அமையும்.
பல்வேறு காலகட்டங்களில் பல தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும் இந்த கலாச்சார மையம் செயல்படும்.
பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டது.
- இரு நாடுகளிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார்.அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்று என பதிவிட்டுள்ளார்.
- “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்று மறுபெயரிடுவது பிரதமர் மோடியின் மற்றொரு அடையாளமாகும்.
- இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரீக தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சியில் அதிக உந்துதலுடன் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ் பெற்ற கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என்று மறுபெயரிடுவது பிரதமர் மோடியின் மற்றொரு அடையாளமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பழமையான வாழும் மொழி மற்றும் கலாச்சாரமான தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் பணி நடந்து வருகிறது. இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரீக தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.