என் மலர்
நீங்கள் தேடியது "மைக்கேல் பார்னியர்"
- பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் மேக்ரான் நியமித்தார்.
- பல்வேறு பதவிகளை வகித்துள்ள பார்னியர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக இருந்துள்ளார்.
பாரீஸ்:
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73). இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
பல்வேறு பிரெஞ்சு அரசாங்கங்களில் பதவிகளை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார் என பிரதமர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.
இதன்மூலம் பிரான்சின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மைக்கேல் பார்னியர் பெறுகிறார்.
- பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
- அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது.
3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர் இதனை தொடர்ந்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்க்கப்பட்டது.
பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.