search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெத்தில் தேவிகா"

    • முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும்.
    • பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

    இதையடுத்து பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரபல நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி இருக்கிறது.


    இந்நிலையில் முகேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது முன்னாள் மனைவியான மெத்தில் தேவிகா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். அது உண்மை என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள நோக்கத்தை சந்தேகிக்கிறேன்.

    நான் முகேசுடனான உறவை முறித்துக் கொண்டாலும், நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனைவியாக அவருடன் நான் இனி உறவை தொடர விரும்பவில்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதுடன், உண்மையான குற்றச்சாட்டுகளில் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமான பணியாக உள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்று யாரையும் குற்றம் சாட்டுவது ஒரு புதிய இயல்பான ஒன்றாகிவிட்டது.

    இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களின் பொருத்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×