என் மலர்
நீங்கள் தேடியது "சென்ட்ரல்"
- சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.
- திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து.
சென்னை,
அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
ராயபுரம்:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 6-ந்தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.
கே.வி.குப்பம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து கீழே தள்ளவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து ரெயிலில் செல்லும் பணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் படி, ரெயில்வே ஐ.ஜி. பாபு, சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது விரைவு ரெயில் மற்றும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் பெட்டியில் தனிநபராக பயணம் செய்யும் சூழ்நிலை இருந்தால் மற்ற பெட்டியில் சக பயணிகளோடு பயணம் மேற்கொள்ளவும், மர்ம நபர்கள் யாரேனும் தவறாக நடக்க முயற்சி செய்தால் ரெயில் பெட்டியில் உள்ள அவசரநிலை செயினை பிடித்து இழுக்கவும், அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.