search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் 2024"

    • செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று அசத்தல்.
    • இந்திய அணிக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அந்த வரிசையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

    பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் பேசிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா, "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றைச் செய்துள்ளோம், 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளோம்.. கிரிக்கெட்டும் மிகவும் கடினமான களம்.. விளையாட்டுகளை ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன், ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் கடினம்," என்று தெரிவித்தார்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியது.
    • தங்கம் வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

    செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

     


    இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
    • குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.

    அதில், அதிக புள்ளிகளை பெற்று செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.90 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்

    குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையும் அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம்.

    சென்னை:

    அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

    டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஜராத்தி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.

    செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2022) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, விளையாடாத கேப்டன் ஸ்ரீநாத் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் அங்கேரியில் இருந்து ஜெர் மனி வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர்.

    டி.குகேஷ் இன்று காலை 8.25 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனர். செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவர்களை ஊக்குவித்தனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி, பொருளாளர் ஆர்.சீனிவாசன், வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஐயப்பன் உள்பட பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    வைஷாலி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கல பதக்கம் வென்று இருந்தோம், அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஓபன் பிரிவில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் அணி, ஒரு சுற்றில் தோல்வியடைந்து, மற்ற 2 ரவுண்டுகளை வென்று ஆக வேண்டிய நேரத்தில், இரண்டு சுற்றும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரக்ஞானந்தா கூறியதாவது:-

    கடந்த முறை மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம், இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து சுற்றுகளும் கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும் தங்கப் பதக்கம் உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
    • கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் மகிழ்ச்சி.

    புடாபெஸ்ட்:

    அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

    டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஷாத்பி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் ஓபன் பிரிவில் 21 புள்ளிகள் எடுத்தது. 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு சுற்று 'டிரா' ஆனது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    பெண்கள் பிரிவில் 19 புள்ளிகள் கிடைத்தது. 9 வெள்ளி பெற்றது. ஒரு சுற்றில் 'டிரா' செய்தது. ஒரு சுற்றில் தோல்வியை தழுவியது.

    செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2021) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.

    ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 2 சுற்றில் 'டிரா' செய்தார். தங்கம் வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-

    எனது ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிந்தது. மேலும் அணியாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.

    கடந்த காலங்களில் பல மோசமான தோல்விகளை தழுவி இருந்த போதிலும் இந்த முறை ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்ல முடிந்தது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


    கடைசி சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். நிச்சயமாக போட்டியில் வெல்வதே விரும்பினேன். அதன்படி கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் நிம்மதி அடைந்தோம். கடந்த முறை தங்கம் வெல்லும் அணியாக நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளித்தது.

    உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறை தங்கம் வென்று அசத்தல்.
    • விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

    செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!"

    "சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
    • இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "ஹங்கேரியில் இருந்து நம்பமுடியாத செய்தி! 45வது ஃபைடு செஸ் ஒலிம்பியாட் 2024-இல் தங்கம் வென்று இந்திய அணி தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு."



    "ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.
    • இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது.

    45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் 10 ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது. இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்ற இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கி இருந்தது. இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.

    இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகளில் இந்தியா அணி முன்னணி வகித்த நிலையில், ஆண்கள் அணி பத்து போட்டிகள் முடிவில் 19 புள்ளிகளை பெற்றது.

    இதை தொடர்ந்து அதிக புள்ளிகளை பெற்ற இந்தியா செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

    • 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த 10-வது சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    புடாபெஸ்ட்:

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 10-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது.

    இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கியது.

    இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த 7வது சுற்றிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    புடாபெஸ்ட்:

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 7-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, ஜார்ஜியாவை சந்தித்தது.

    இதில் வந்திகா அகர்வால், வைஷாலி ஆகியோர் ஜார்ஜியா வீராங்கனைகளை தோற்கடித்தனர்.

    இறுதியில் இந்தியா 3-1 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி தொடர்ந்து 7-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதேபோல் இந்திய ஆண்கள் பிரிவில் குகேஷ், சீனாவின் வெய் யீயை தோற்கடித்தார். மற்ற வீரர்கள் டிரா செய்தனர். இதையடுத்து, இந்திய ஆண்கள் அணியும் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

    • அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர்.
    • குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புடாபெஸ்ட்:

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முன்தினம் ஓபன் பிரிவில் நடந்த 6-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. தொடர்ந்து 6 சுற்றுகளிலும் வெற்றிகளை குவித்த இந்தியா 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் 7-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர். பிரக்ஞானந்தாவும் (2 வெற்றி, 3 டிரா) நல்ல நிலையில் உள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் இருவர் தான் நவம்பர்- டிசம்பரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்ற ஆவல் செஸ் பிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

    பெண்கள் பிரிவிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 7-வது சுற்றில் ஜார்ஜியாவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    ×