search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமா கோலி"

    • மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும்.
    • நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து கொண்டதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில், நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஹிமா கோலி அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மத நிகழ்வுகளில் நீதிபதிகள் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இறை நம்பிக்கையும், ஆன்மிகமும் மதத்தில் இருந்து வேறுபட்டவை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    மதச்சார்பற்ற இறையாண்மை கூடிய ஜனநாயகத்தைதான் அது முன்னிறுத்துகிறது. அதைதான் நாம் பொதுவெளியில் பிரதிபலிக்க வேண்டும். நீதிபதியின் தனிப்பட்ட மத நம்பிக்கை, அவர் நீதி வழங்குதலில் குறுக்கிடலாம் என்ற அச்சம் மக்களிடம் வந்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.

    ×