என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனஞ்செயா டி செல்வா"

    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது.
    • எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    நியூசிலாந்து தொடருக்கு முன்பு இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தியதில் இருந்து மன உறுதி உயர்ந்துள்ளதாக இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் பெற்ற வெற்றி எங்களது மன உறுதியை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    பெரிய பார்ட்னர்ஷிப்கள் எப்போதுமே கலேவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உதவுகின்றன. ஆனால் எங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். ஏனெனில் எங்கள் கீழ் வரிசை பேட்டிங் மிகக் குறைந்த சராசரியாக இருக்கிறது.

    என்று தனஞ்செயா தெரிவித்துள்ளார்.

    ×