என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கதேசம் தென் ஆப்பிரிக்கா தொடர்"
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
- 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸட் வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்றது.
கடந்த 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டோனி டி ஜோர்ஜி 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும், முல்டர் 105 ரன்களும் விளாச முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 159 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் பேட்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் வங்கதேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு தென்ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டது.
2-வது இன்னிங்சில் மகாராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 5 விக்கெட்டும், முத்துசாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தொடரை 2-0 என கைப்பற்றியது.
- வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
- ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சட்டோகிராம்:
தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டான் ஸ்டப்ஸ் சதம் (106 ரன்) அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் டோனி சி ஜோர்சி 141 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 18 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். டேவிட் பெடிங்காம் 59 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய டோனி டி ஜோர்சி 177 ரன்னிலும் (269 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதை தொடர்ந்து வந்த வியான் முல்டெர் அவரது முதலாவது சதத்தை எட்டினார். அத்துடன் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 144.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஷன்டோ 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1, மஹிதுல் இஸ்லாம் அன்கான் 0, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து மொமினுல் ஹக் - தைஜுல் இஸ்லாம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. அடுத்த சிறிது நேரத்தில் இஸ்லாம் 30 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் வங்கதேசம் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
- ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.
- டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம்- டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்தது. மார்க்ராம் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து டோனி டி ஜோர்ஜி மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி வங்கதேச அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு விளையாடினர். இதனால் இருவரும் சதம் அடித்து அசத்தினர். டெஸ்ட்டில் இருவருக்கும் இது முதல் சதம் ஆகும். ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.
இதனால் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
- இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.
வங்கதேசம் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களை குவித்தது. இதனால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டொனி டி சொர்சி 41 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களும், ஸ்டப்ஸ் 30 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கைல் வெர்ரேய்ன் 18 ரன்னிலும் வியான் முல்டர் 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் தொடங்கியது. இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தனர். முல்டர் 54 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த மகாராஜ் 0 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Played Verreynne ?? #BANvSA pic.twitter.com/GEivW7q4BX
— naeemah (@NaeemahBenjamin) October 22, 2024
இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
- வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Wicket number 300 for Kagiso Rabada?
— FanCode (@FanCode) October 21, 2024
He is the only bowler in the history of Test cricket to reach the milestone with a strike rate of less than 40.?#BANvSAonFanCode pic.twitter.com/RtUUphAwYE
இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.
மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.
- தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன்.
ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். அந்த போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் போது அமைதி இருந்ததற்காக வங்கதேச மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலாவதாக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேசிப்பவரின் இழப்பை எந்த தியாகமும் ஈடுசெய்ய முடியாது என்றாலும், எனது மௌனத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஒரு குழந்தையையோ அல்லது சகோதரனையோ இழந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த இக்கட்டான காலகட்டத்தில், உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால், நானும் வருத்தப்பட்டிருக்கலாம்.
எனது கடைசி போட்டியில் நான் விரைவில் விளையாடுவேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் விடைபெறும் தருனத்தில் நீங்கள் அனைவரும் சுற்றியிருக் விரும்புகிறேன். யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன். நான் சந்திக்க விரும்புகிறேன்.
நான் நன்றாக விளையாடியபோது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தவர்களின் கண்களை நான் சந்திக்க விரும்புகிறேன். நான் விளையாடாதபோது அவர்களின் கண்கள் கண்ணீர் வழிந்தன. இந்த விடைபெறும் தருணத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உண்மையில், நட்சத்திரம் நான் அல்ல, நீங்கள் அனைவரும்.
என்று கூறினார்.
- தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
- இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது, டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் நீண்ட நாட்கள் கழித்து செனுரன் முத்துசாமி இடம்பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், மார்க்ராம், வியான் முல்டர்,செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்