search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்டர் 19 டெஸ்ட்"

    • 13 வயதான வைபவ் சூரியாவான்சி சதம் விளாசினார்.
    • அவர் 104 ரன்னில் அவுட் ஆனார்.

    சென்னை:

    ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் 13 வயது வீரரான வைபவ் சூரியன்வாசி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியன்வாசி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியாவான்சி படைத்தார்.

    இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    வைபவ் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி வரலாற்றில் இளம் அறிமுக வீரர் ஆனார், பீகார் அணிக்காக 12 வயதில் விளையாடி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார் . அவர் இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    வைபவுக்கு 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×