search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஆதரவு"

    • திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
    • சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றனர்.

    சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள தொழிலாளர்களை திமுக கூட்டணி தலைவர்வர் சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

    அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "

    சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்" என்றார்.

    மேலும் அவர்கள், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பிரச்சினை தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    தொழிலாளர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல.

    காஞ்சிபுரம் காவல்துறை, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. காஞ்சி காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது. தெழிாலளர்களின் கோரிக்கைகளளை ஏற்க மறுப்பது ஏன் ? தொழிலாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

    சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றனர்.  

    ×