என் மலர்
நீங்கள் தேடியது "இன்டர்போல்"
- ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
- 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடதுக்கீட்டை எதிர்த்து கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்று வரை அவர் இந்தியாவிலேயே உள்ளார்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
- இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை அமலாக்கத்துறை வலை வீசி தேடி வந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இதில் பெட் கட்டிய லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். சுமார் ரூ.5000 கோடி வரை இந்த செயலி மூலம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து இன்று [அக்டோபர் 11] இன்டர்போல் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் சந்திரசேகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
- சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன.
- இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ள சில்வர் நோட்டிஸ் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும்
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு. பிறநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது. சர்வதேச குற்றச்செயல்களை துப்புத் துலக்குவது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில், பதுக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இன்டர்போல் அமைப்பு 'சில்வர்' நோட்டீஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாபியா கும்பலை சேர்ந்த ஒருவர் சொத்து விவரங்களை கேட்டு இத்தாலி நாட்டிற்கு முதல் சில்வர் நோட்டிஸை இன்டர்போல் வழங்கியுள்ளது.
சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன. இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ள சில்வர் நோட்டிஸ் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் என்று கூறப்படுகிறது.