search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிமன்யு ஈஸ்வரன்"

    • உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அபிமன்யு 127 ரன்கள் குவித்தார்.
    • தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

    ரஞ்சி கோப்பை டிராபியில் உத்தர பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக சுதீப் சட்டர்ஜி சதம் விளாசினார். இதனையடுத்து உத்தரபிரதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஆர்யன் ஜூயல் 92 ரன்கள் விளாசினார்.

    இந்நிலையில் 19 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் மட்டும் இழந்து 254 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் உத்தரபிரதேசம் அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அவர் அசத்தி உள்ளார். முதல் தர போட்டியில் இது அவருக்கு 27-வது சதம் ஆகும். இதனால் அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேக்-அப் இடத்திற்கு தகுதியானவராக இருப்பார் என அதிகாரிகள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விலக உள்ளதாக அந்த இடத்தை இவர் நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.

    ×