என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்னா பைரேட்ஸ்"

    • புனேரி பால்டன் 40-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்சை பந்தாடியது.
    • உ.பி. அணி 28-23 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை தோற்கடித்தது.

    ஐதராபாத்:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி, தபாங் டெல்லியை எதிர்கொண்டது. கடும்போட்டி நிலவிய முதல் பாதியில் உ.பி. அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் (12-11) முன்னிலையில் இருந்தது. பிற்பாதியில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்திய உ.பி. அணி இறுதியில் 28-23 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை தோற்கடித்து, இந்த போட்டியை வெற்றியோடு தொடங்கியது.

    அதிகபட்சமாக உ.பி. வீரர் பவானி ராஜ்புத் ரைடில் 7 புள்ளிகள் எடுத்தார். 2-வது லீக்கில் ஆடிய டெல்லிக்கு இது முதலாவது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 40-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்சை பந்தாடியது.

    இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தாஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி அடைந்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.

    இறுதியில் இந்தப் போட்டியில் 42-40 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் தேவங்க் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

    மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் 36-22 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • பாட்னா அணி இன்று 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.

    இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடின.

    இறுதியில், பாட்னா அணி, யுபி யோதா அணியை 42-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தபாங் டெல்லி அணி நான்காவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 43-41 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இது பாட்னா பைரேட்ஸ் அணி பெறும் 4வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய தபாங் டெல்லி 39-26 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    தபாங் டெல்லி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.

    • 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
    • முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி அதிரடியில் மிரட்டியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் 60- 29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 41-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலும் பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஏற்கனவே அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா, டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    புனே:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும், 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவிலும் நடைபெற்றன.

    கடந்த 2 மாதமாக நடந்து வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களைப் பிடித்த உ.பி. யோதாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், புனேவில் இன்று நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் உ.பி. யோதாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    புள்ளிப்பட்டியலில் 7 முதல் 12 இடங்களைப் பிடித்த தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    இதற்கிடையே, பிளே ஆப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் உபி யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதாஸ் அணிகளும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 32-28 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா பைரேட்ஸ் அணி தோற்று 2வது இடம் பிடித்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    பிளே ஆப் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ×