search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 பந்து போட்டி. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்"

    • இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 100 பந்துகளை மட்டுமே கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடருக்கு ஐபிஎல் போல மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதனால், ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஒவ்வொரு அணிகளின் 49% பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.

    ஹன்ட்ரட் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×