என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டிங் பயிற்சியாளர்"

    • கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
    • சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பார்த்திவ் படேல் பணியாற்றி உள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

    தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

    • இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன், இவர் இந்திய அணியில் இணையவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    நியூசிலாந்திடம் தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1-3 தோல்வி உட்பட மோசமான ஆட்டத்தால் இந்திய அணி மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதனையடுத்து இந்திய அணியில் பல மாற்றங்கள் வந்துள்ளது. சம்பளத்திலும் வீரர்களின் மனைவிகளை போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்வதிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

    அதன்படி பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணியில், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களான அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் போன்ற பயிற்சியாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 22-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன், இவர் இந்திய அணியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தொடர்களில் ஏமாற்றமான ஆட்டத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ புதிய சிறப்பு பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்வு செய்ததுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    52 வயதான சிதான்ஷு கோடக், சௌராஷ்டிராவின் முன்னாள் கேப்டனாக 130 போட்டிகளில் விளையாடி 8061 ரன்கள் எடுத்துள்ளார்.

    ×