search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து அரசு"

    • மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக ‘பட்டிங்டன்’ கரடி விளங்கியது.
    • இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட், 1958-ம் ஆண்டு 'பட்டிங்டன்' என்ற சிறுகதை புத்தகத்தை எழுதினார். பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதை புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்து பிரபலமானது.

    இதனை தொடர்ந்து அந்த பாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மட்டுமின்றி சினிமா படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக 'பட்டிங்டன்' கரடி விளங்கியது.

    இந்தநிலையில் 'பட்டிங்டன்' கதாபாத்திரத்தை தழுவி உருவாகும் புதிய சினிமா படத்துக்காக போலியாக பாஸ்போர்ட் ஒன்றை உருவாக்கி தருமாறு குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதனைதொடர்ந்து இங்கிலாந்து அரசு 'பட்டிங்டன்' பெயரில் அசல் பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

    ×