என் மலர்
நீங்கள் தேடியது "த.வெ.க. மாநாடு"
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
- இன்று நடக்கும் முதல் கட்சி மாநாட்டிற்கு பல்வேறு திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் நடிகர் விஜய் கட்சி கொடியை ஏற்றவுள்ளார்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். திடலெங்கும் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய்க்கு அதன் முதல்படியாக இன்று நடக்கும் முதல் கட்சி மாநாட்டிற்கு பல்வேறு திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரெஜினா, "விஜய் வெற்றிகரகமான நடிகர். வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்" என்று அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி "தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க.. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்". என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்களான கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு, நெல்சன் திலிப்குமார்,ஜெயம் ரவி, பிரசன்னா, ஆர்.ஜே பாலாஜி, அர்ஜூன் தாஸ், அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் அவர்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
- த.வெ.க கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
த.வெ.க கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. கட்சி கொடியை விஜய் ஏற்றி தொடங்கி வைத்தார். பொதுச் செயலலாளர் மற்றும் செயலாளர் த.வெ.க கட்சியின் கொள்கையை அறிவித்தனர்.
விஜய் கட்சி விழாவில் மேடையில் ஏறி உரையாற்றுவதற்கு முன் அவரது தந்தை மற்றும் தாயை கட்டிப்பிடித்து ஆசிர்வாதத்தை பெற்றார். அதற்கு பின் மேடையில் ஏறி மாசாக ஸ்டைலாக பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து இன்றுநடைபெற்றது.
- விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.
அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை என எடுத்துரைத்தனர்.
தற்பொழுது விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார். அப்பொழுது அவர் "மக்களுக்கு கொண்டு வர அரசியல் திட்டம் எல்லாம் மிகவும் பிராடிக்கலாக இருக்க வேண்டும். வொர்க் அவுட் ஆகாத திட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. அப்பொழுது அவர் "மீன் பிடிச்சு கொடுக்க கூடாது அது தப்பு மக்களுக்கு மீன் பிடிக்க கத்துக் கொடுக்கனும் அப்படி இப்படி சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா எங்களோட அரசியல் திட்டமே வேற முடிஞ்சவங்க மீன் பிடிக்கட்டும் முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சு அவங்களுக்கு கொடுத்து வாழவைப்போம்."
"நம்மளோட அரசியல் கட்சி எப்பயும் எதார்த்தமா இருக்குங்க . இந்த மாற்று அரசியல் , மாற்று சக்தி, அத பண்றேன் இத பண்றேன்னு இந்த ஏமாத்து வேலை செய்ய இங்க வரலங்க. ஐயா ஏற்கனவே 11-12 இருக்குற அரசியல் கட்சில நானும் ஒரு ஆளா மாற்று அரசியல்-ன்னு சொல்லிகிட்டு . இந்த எக்ஸ்டரா லக்கேஜ்ஜா நான் இங்க வரல ப்ரோ. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை." என கூறினார்.
இவரது பேச்சில் மீன் கதை மற்றும் மாற்று அரசியல் பற்றிய கருத்துக்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை த.வெ.க. தலைவர் விஜய் தாக்கியதாக நெட்டிசன்கள் கூறியதாக பகிர்ந்து வருகின்றனர்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அன்போடு அணிந்த படி விஜய் நடந்து சென்றார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. இதற்கடுத்து தலைவர் விஜய் அவரது அரசியல் பிரவேசத்தை ஆவேசமாக தொடங்கி அவரது கட்சி கொள்கை பற்றியும் , அவரது சித்தாந்தத்தை அவரது ஸ்டைலில் மிகவும் உறுதியோடு பேசி அரங்கை அதிரவைத்தார்.
இவரது பேச்சு முடிந்தப்பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயர் விளக்கமும். கட்சி கொடியின் வண்ணம் குறித்த விளக்கத்தை அவரது சொந்த குரலில் பேசி விளக்கத்தை தரும் வீடியோவை விழாவில் ஒளிப்பரப்பானது.
அந்த வீடியோவின் ஆரம்பத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே.. ஒரு அடையாளமா மாறனும்னா, நம்மளோட பெயரயே நாம அடையாளமா மாத்தனும். கட்சியின் மையச்சொல்லாகவும் மந்திர சொல்லாகவும் வெற்றி என்ற சொல்லை வைத்துள்ளோம்.
தமிழர்களின் அகம் தமிழகம் என்பதனால் நம் கட்சியின் முதல் சொல் தமிழகம் என வைத்துள்ளோம். மூன்றாவது சொல்லான கழகம். கழகம் என்றால் அடல் பயிலும் இடம் என்ற ஒரு அர்த்தம் இருக்கிறது. அதேப்போல் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடமாக நம் கட்சி இருக்கும். அரசியல் உலகின் அணையா சுடராக இருக்கும் நமது தமிழகம் வெற்றி கழகம். அதைத் தொடர்ந்து கட்சி கொடியின் வண்ணம் குறித்த விளக்கத்தைப் பற்றி அந்த வீடியோவில் பேசிருந்தார்.
- விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- பலத்தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும் , பொறுப்பாளர்களும் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவில் த.வெ.க கட்சியின் கொள்கை பாடல், கட்சியின் பெயர் விளக்க பாடலும் வெளியிடப்பட்டது. கட்சி கொடியை விஜய் ஏற்றி தொடங்கி வைத்தார். பொதுச் செயலலாளர் மற்றும் செயலாளர் த.வெ.க கட்சியின் கொள்கையை தெரிவித்தனர்.
விஜய் கட்சி விழாவில் மேடையில் ஏறி உரையாற்றுவதற்கு முன் அவரது தந்தை மற்றும் தாய் கட்டிப்பிடித்து ஆசிர்வாதத்தை பெற்றார். அதற்கு பின் மேடையில் ஏறி மாசாக ஸ்டைலாக பேசினார்.
இவர் பேசிய அரசியல் கொள்களைகளுக்கு பலத்தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும் , பொறுப்பாளர்களும் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க ஒருகிணைப்பு குழு தலைவரான எச்.ராஜா அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " தமிழகத்தில் தேசியத்திற்கு ஆக்கம், ஊக்கம், தந்த பெரிய மகான்களான வ.உ.சி , பாரதி போன்ற நபர்களை குறிப்பிடவில்லை. ஒரு பக்கம் வீரமங்கை வேலு நாச்சியார் அவரோட புகைப்படத்த வச்சிருக்காரு. மறுப்பக்கம் 1944-ல் ஆன்கிலேயரை தமிழ்நாட்டை வீட்டு செல்ல கூடாது என போராட்டம் நடத்தி, லண்டனில் இருந்தாவது சென்னையை ஆளவேண்டும் என கோரிக்கை வைத்த ஈ.வெ.ரா புகைப்படத்தை வைத்துள்ளார். இதுல இருந்து என்ன தெரியுதுனா அவருக்கு ஐடியாலஜி ல தெளிவு இல்லாமல் இருக்கிறார். அவர் தெளிவு ஆகி பேசும் பொழுது இந்த பிரச்சனைகளை பற்றி பேசுவோம்.
இந்த நாட்டுல இருக்குற ஒரே மதசார்பற்ற கட்சி மதத்திற்கு ஒரு தனி சட்டம் கூடாது என நம்பிக்கை இருக்க கூடிய ஒரு பா.ஜ.க கட்சி ஆகும். எனவே அவர் எங்கள் சித்தாந்தத்தில் போட்டியாகவுள்ளார் என்றும் போட்டியாக முடியாது என நினைக்கிறேன்.
திராவிட கட்சி ஆன தி.மு.க வை விடவா மதவாத பிழவுவாத அரசியலை பா.ஜ.க செய்கிறது. தி.மு.க வின் மைய சிந்தனையே மொழி வெறுப்பு, சாதி வெறுப்பு, மாநில வெறுப்பு, இந்து வெறுப்பு தான அவங்களோட அடிப்படையே அதனால அவங்களோட வாக்கு பிரியுமே தவர. தேசியவாதி கட்சியான பா.ஜ.க என்றும் தேசியவாதிகளின் வாக்குகளை பிரித்துவிட முடியாது.
- 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருமான வரி விலக்கு என்பதை உளமார வரவேற்கிறேன்.
- தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்
2025-26-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக்குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு/ எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.
அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.
இவ்வாறு அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
- நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
- சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
விழுப்புரம்:
உலக மகளிர் தின விழா உலகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க . கட்சி சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் ஏற்பாட்டின் படி விழுப்புரம் நகராட்சிகாமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. கட்சி மாநில செயலாளரும் முன்னாள்ன எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளி களுக்கு மிதிவண்டிகள், 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து எந்திரம், 500 மகளிர்களுக்கு சேலைகள்,150 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, 250 பேர்களுக்கு டபுள்டிபன் பாக்ஸ்,250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பு பைகள்,100 பெண்களுக்கு சில்வர் குடம், 50 விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு மண்வெட்டி, சலவை தொழிலாளி 5 பேர்களுக்கு இஸ்திரி பெட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் மகளிர்களுக்கு தலைக்கவசம் 50 நபர்களுக்கும், துப்புரவு தொழிலாளர் 25 நபர்களுக்கு கோட்,15 செவிலியர்களுக்கு கோட், 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் சாலையோரம் நடை வியாபாரிகள் பேருக்கு 50 குடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால் தான் நம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்ட செயலாளருடன் 14 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். அதில் 5 மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது .
பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். பெண்கள் எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்து சாதனை செய்யும் போர் குணம் கொண்டவர்கள். தாய்மார்களின் ஆதரவும் அன்பும் நம் தலைவர் தளபதிக்கு அதிகளவில் உள்ளது. உங்களைப் போன்ற தாய்மார்களை நம்பி தான் தலைவர் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார் தலைவரை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் .
சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தளபதி சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நமது தலைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.