என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் தாமதம்"

    • சிக்னல் கிடைக்காததால் நடைமேடைகளில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4-வது நடைமேடை யில் சென்னை நோக்கி செல்லும் பாதையில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    ரெயில்களுக்கு சிக்னல் கிடைக்காததால் அடுத்தடுத்து நடைமேடைகளில் சென்னை மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரெயில் உள்பட 3 ரெயிகள் புறப்படவிலை.

    இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக சென்னை நோக்கி செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.


    இதனால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தினந்தோறும் அரக்கோணத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தம் செல்கிறோம்.

    சென்னையில் இருந்து வரும்போது அரக்கோணத்திற்கு 10 கிலோ மீட்டர் முன்பே ரெயிலை நிறுத்துகின்றனர்.

    பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் வருகிறது. கேபினில் வேலை செய்யும் ஊழியர்கள் சரிவர சிக்னல் கொடுப்பதில்லை.

    இதுகுறித்து பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அனுபவமுள்ள கேபின் ஊழியர்களை ரெயில்வே நிர்வாகம் பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×