search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம் ஆப்கானிஸ்தான் தொடர்"

    • டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்து சாதனை.
    • சச்சின் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும் அடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 77 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

    குர்பாஸ்க்கு நேற்றுடன் 22 வயது 357 நாட்கள் முடிவடைந்தது. இதன்மூலம் இளம் வயதில் 8 சதங்களை நிறைவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    தென்ஆப்பிரிக்காவின் டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    சச்சின் தெண்டுல்கர் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும், பாபர் அசாம் 23 வயது 280 நாட்களிலும் 8 சதங்களை எட்டியிருந்தனர்.

    அதிக சதங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முகமது ஷேசாத் 6 சதங்கள் அடித்துள்ளார். குர்பாஸ் வங்கதேசத்திற்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஷார்ஜா மைதானத்தில் நேற்றைய சதம் அவரின் 3-வது சதம் ஆகும்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்கதேசம் 252 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ 72 ரன்னும், ஜாகர் அலி 37 ரன்னும், சவும்யா சர்க்கா 35 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ரஹமத் ஷா மட்டும் தாக்குப்பிடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 68 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியினர் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷாண்டோ 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    ×