search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஆர்.சி.டி.சி."

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விரைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களுக்கு பொதுமக்கள் எப்போதும் நாடுவது ரெயில் பயணங்களையே. இதனால் முக்கிய ரெயில்களில் காத்திருப்போர் வரிசை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, திட்டமிடாத திடீர் பயணங்களுக்கு டிக்கெட் பொதுமக்கள் அதிகம் நாடுவது தட்கல் டிக்கெட்டுகளையே. இதன்மூலம் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடாதவர்களும் பாதுகாப்பான ரெயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

    டிக்கெட் கவுன்டர்கள் மட்டுமல்லாமல், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போதைய நிலையில், மொத்த ரெயில் டிக்கெட்டுகளில் 80 சதவீதம் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரெயில் பயணி ஒருவர் கூறுகையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் எனது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் மூலம் இணைத்து பதிவு செய்துள்ளேன். டிக்கெட் எடுக்கும் நேரத்தில் கால நேர விரயம் ஏற்படுவதை தடுக்க ஆர்-வாலட் மூலம் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றும், பணம் செலுத்திய சிறிது நேரம், இணையதளம் முடங்கி, பின்னர் 5 நிமிடங்கள் கழித்து நேரம் முடிவடைந்து விட்டது என்றோ அல்லது கேப்சா சரியாக பதிவேற்றப்பட வில்லை என்றோ தகவல் வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்கள் வரை எனக்கு இந்த பிரச்சினை இல்லை. கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்சினையை சந்திக்கிறேன். காலை 10 மணிக்கு தொடங்கும் ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகள் எடுப்பதில் எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால் ஏ.சி. அல்லாத டிக்கெட் எடுக்கும் போது மட்டுமே பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

    இதே போல் மற்றொரு ரெயில் பயணி கூறுகையில், நான் மதுரையிலிருந்து அடிக்கடி தொழில் விஷயமாக வடமாநிலங்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அவசர பயணங்களுக்காக, மொபைல் ஆப் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் புக் செய்யும் போது, இணையதளம் முடங்கி விடுகிறது. நான் அதிக வேகமுடைய இன்டர்நெட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முயன்றாலும் என்னால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற நேரங்களில் ரெயில் டிக்கெட் ஏஜென்டுகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள்.

    இது எப்படி என்று தெரியவில்லை. என அதிருப்தி தெரிவித்தார்.

    அதிகளவில் பயணிகள் டிக்கெட் பெறுவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் சாதாரண பயணிகள் இணையதளம் மூலமாக தட்கல் உள்ளிட்ட ரெயில் டிக்கெட்டுகளை பெறுவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ரெயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×