என் மலர்
நீங்கள் தேடியது "பித்தப்பை கல்"
- பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- உணவு செரிமானத்தில் பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
- ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும்.
பித்தப்பை கல் என்றால் என்ன?
இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones) என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம்.

இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல்பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
அதுபோல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு தனி அறை. நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது. அவை கொழுப்பு, பித்தச்செம்பசை, பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.

பித்தப்பையில் கல் உருவாக காரணம்?
இந்த நோயானது நம் குடும்பத்தில் யாருக்காவது இருந்தது என்றால். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது.
உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது. அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். கர்ப்பமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
அறிகுறிகள்:
மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
குமட்டல்.
வாந்தி.
உணவு பாதையில் பிரச்னை, வாயு தொல்லை, அஜீரணம்.
வீட்டு வைத்திய முறை:
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.