என் மலர்
நீங்கள் தேடியது "வானிலை மையம் தகவல்"
- 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.
- சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை, இந்திய பெருங்கடலின் மத்திய பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் நிலை கொண்டது.
இது மேலும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8.30 மணியளவில் வலுவடைந்தது. இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும். இன்று முதல் 27-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
28 மற்றும் 29-ந்தேதிகளில் ஒருசில மாவட்டங்க ளில் கன மழை பெய்யும். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.