என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதவை கருவி"

    • ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இது அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூர், திருவெற்றியூர், காசிமேடு ஆகிய பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் ஆழம் குறித்தும் பாறைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டி கண்டறிய பொறுத்தப்படும் மிதவை கருவி ஒன்று மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அதனை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டையிலும் ஒரு மிதவை கருவி கரை ஒதுங்கி உள்ளது.

    இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் சில இளைஞர்கள் அந்த கருவியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    • கடலில் மிதவை வழிகாட்டும் கருவிகளை துறைமுகம் சார்பில் மிதக்கவிடப்பட்டுள்ளன.
    • கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது.

    சென்னை:

    சென்னை துறைமுகத்திற்கு கப்பல்கள் பாதுகாப்பாக உள்ளே வரவும், வெளியே செல்லவும் கடலில் மிதவை வழிகாட்டும் கருவிகளை துறைமுகம் சார்பில் மிதக்கவிடப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒளிரும் வெளிச்சத்தை பார்த்து கப்பல் கேப்டன்கள் பாதுகாப்பாக கப்பல்களை துறைமுகத்திற்கு உள்ளே கொண்டு வருவார்கள்.

    இவ்வாறு சென்னை துறைமுகம் அருகில் மிதக்கவிடப்பட்டிருந்த கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை ஒன்று மெரினா கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கியது. இதனை பார்வையிட பொதுமக்கள் அதிகம் கூடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மெரினா கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, இதுகுறித்து துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதேபோல், நேற்று பகல் 12.45 மணி அளவில் புதுவண்ணாரப்பேட்டை அருகில் உள்ள கடல் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடற்கரையில் 'போயா' என்னும் மிதவை கருவி கரை ஒதுங்கி உள்ளது.

    கடல் சீற்றத்தால் இந்த கருவி தற்போது கரை ஒதுங்கி உள்ளது. இது தொடர்பாக துறைமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×