என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குர்ஜப்னீத் சிங்"

    • சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.

    21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.

    • சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோதின.
    • இதில் பரோடா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான தமிழ்நாடு அணியும் குர்ணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 30 பந்தில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங்கை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    இந்த போட்டியில் குர்ஜப்னீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர் 1 பவுண்டரி விளாசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஓவரை பறக்க விட்ட மும்பை கேப்டன் என சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் விஜய் ஷங்கர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மும்பை - சிஎஸ்கே என்ற போட்டி ஆரம்பித்து விட்டது.



    ×