search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேச விரோத நடவடிக்கை"

    • குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
    • பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.

    மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மணிப்பூரின் வன்முறைக்கு முழு பொறுப்பேற்று பைரன் சிங் தலையாயினாலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

     

    மிசோரம் முதல்வர் லால்துஹோமா

    இதற்கு மத்தியில் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று மிசோரமில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. MNF பொதுச் செயலாளர் VL Krosehnehzova, மாநில அரசாங்கத்தின் தோல்வியால் தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    அவர் இதை கூறி சில மணிநேரங்களுக்குப் பிறகே MNF கட்சியை தேச விரோத கட்சியாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரின் உள் விவகாரங்களில் MNF தொடர்ந்து தலையிடுவதை ஏற்கமுடியாது.தேச விரோத மியான்மர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வது மற்றும் மணிப்பூருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது MNF.

     

    சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அண்டை நாடான மியான்மர் அருகே இந்திய எல்லைகளை வேலி அமைக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் MNF தேச விரோதக் கட்சியாக அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்று மணிப்பூர் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

    ×