என் மலர்
நீங்கள் தேடியது "உளவாளி"
- ரவீந்திர குமார்,பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் ரகசியங்களை பகிர்ந்தார்.
- ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.
இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.

ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.
படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.
தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.
அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.
தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வாட்சப் மூலம் பகிர்ந்துள்ளார்.
- இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார்.
குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவாளிக்குத் தினமும் ரூ.200 க்கு விற்ற நபரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் கடலோர நகரமான துவாரகாவில் பணிபுரிந்து வந்த திபேஷ் கோஹில் என்ற நபர், பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அசிமாவுக்கு பேஸ்புக்கில் பரீட்சயமாகியுள்ளார்.
துவாரகாவில் உள்ள ஓகா பகுதியிலிருந்து முக்கியமான புகைப்படங்களை கோஹில் பாகிஸ்தானுக்குச் சேகரித்து அனுப்பியதாக ATS தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள உளவாளிக்கு கோஹில் அனுப்பியதில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய கடலோர காவல்படை பற்றியது என்று ATS தெரிவித்துள்ளது.
ஓகா துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கோஹில் வாட்சப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குஜராத் ஏடிஎஸ் அதிகாரி கே சித்தார்த், ஓகாவைச் சேர்ந்த ஒருவர் கடலோரக் காவல்படை பற்றிய விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானின் கடற்படை அல்லது ஐஎஸ்ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

இதுதொடர்பான விசாரணையில் ஓகாவில் வசிக்கும் திபேஷ் கோஹிலை கைது செய்தோம். தீபேஷ், பாகிஸ்தானில் தொடர்பிலிருந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். சொந்தமாக வங்கிக்கணக்கு இல்லாத தீபேஷ் தனது நண்பர் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.200 வீதம் அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார். தீபேஷ் மீது கிரிமினல் சதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.