search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே பாகிஸ்தான் டி20 போட்டி"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தானின் சுபியான் முக்கிம் 3 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    புலவாயோ:

    பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 2-1 என தொடரைக் கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டும் இரட்டை இலக்கத்தை தாண்டினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுபியான் முக்கிம் 2.4 ஓவரில் வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரையும் கைப்பற்றியது.

    ×