என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள் கண்டிக்கத்தக்கவை
    • ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.

    வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு டெல்லியில் உள்ள பிரபல ஜும்மா மசூதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த அநீதிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜும்மா மசூதியின் தலைமை ஷாஹி இமாம் சையது அகமது புகாரி வலியுறுத்தியுள்ளார்.

     

     

    இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வங்கதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து, நமது தேசியத் தலைமையும் பொது சமூகமும் அந்நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்திருக்கிறது. இராஜங்கம், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் முஸ்லீம் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் வங்கதேசம் எப்போதும் நெருங்கிய நட்பு நாடாக எங்களுடன் நிற்கிறது.

    இந்த சூழல் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள், தாக்குதல்கள் மற்றும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை. வங்கதேசத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் நாங்கள் ஆற்றிய பங்கையும் அவ்வரசாங்கம் எப்போதும் நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.

    ஷாஹி இமாம் சையது அகமது புகாரி

     

    நம்பகமான அண்டை நாடாக விளங்கும் வங்காள தேசத்தின் நெருங்கிய, வங்கதேசத்தின் தற்போதைய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

     

    அவரது சர்வதேச நற்பெயர் கறைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடாக, இஸ்லாமும் இஸ்லாமிய சட்டமும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவிதமான வெறுப்புக்கும் அல்லது அநீதிக்கும் இயல்பிலேயே இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார். 

    • ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
    • முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின

    உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள்  வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.

    "முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார். 

    பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார். 

    ×