என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை வாணி போஜன்"
- நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர்.
- நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர்.
தமிழில் ஓர் இரவு படத்தில் அறிமுகமான வாணி போஜன் தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகைகள் பற்றி தவறாக பேசுவதாக வாணி போஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றி வரும் கேலிகளும், வதந்திகளும் எனக்கு அழுத்தம் கொடுக்கவே செய்தன. ஒரு பெரிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
அதை பார்த்து பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்டனர். அந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? எதற்காக உங்களை நீக்கினார்கள்? என்றெல்லாம் விசாரித்தனர். இதுபோன்ற அழுத்தங்கள் நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.
நடிகைகள் பட வாய்ப்புகள் பெற்றால் அதுகுறித்தும் தவறாக பேசுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர். நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர். இதுபோன்ற வதந்திகளாலும், கேலிகளாலும் நடிகர்களை விட நடிகைகள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்'' என்றார்.
- ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வாணி போஜன்.
- சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட வாணி போஜனிடம் கவர்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், 'ஓ மை கடவுளே' படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயார் என வாணி போஜன் முடிவெடுத்தார்.

வாணி போஜன்
இதனைத்தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வாணி போஜன்
இதற்கு பதில் அளித்த அவர், "கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்" என்றார். இவரின் இந்த கருத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
- அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேசினோ.
- இதில் வாணி போஜன், மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் வாணி போஜன் நடித்துள்ள படம் கேசினோ. இந்த படத்தில் மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேசினோ
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BigtrickBaddie Director @vp_offl in #ShvedhProductionNo2@Nitinsathyaa@shvedhgroup@actor_vaibhav@SGCharles2@vanibhojanoffl#Poorna@shamna_kasim#EswariRao@ArrolCorelli@madeditor@teamaimprpic.twitter.com/JZJuwn2S1Q
— Shvedh (@shvedhgroup) April 22, 2019