என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை"
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
- 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்டத்திருத்தங்கள் செய்ய வேண்டும் என ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இதன்படி 3 சட்டப்பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என மொத்தம் 18 சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின்போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
- மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி இடம்பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. பி.பி. சௌத்ரி தலைமையிலான கூட்டுக்குழுவில் மொத்தம் 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கூட்டுக்குழு உருவாக்கப்பட்ட நிலையில், இந்தக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டுக்குழு மசோதா குறித்து விரிவான ஆலோசனை நடத்தி மூன்று மாத காலத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட 12வது மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.
- குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை கடந்த மாதம் ஒப்பதல் வழங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதால், இதற்கான மசோதா கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும். மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும் மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவராக பா.ஜ.க. எம்.பி. பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம். செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதிகாரிகள் கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள விதிகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள்.
- 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை உருவாக்குவதற்கு மத்திய அரசு ரூ.95,344 செலவிட்டதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்தியா டுடே சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு 194 நாட்களில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அப்படியென்றால் ஒருநாளைக்கு 491 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்ததாக அரசு தெரிவித்துள்ளது.