என் மலர்
நீங்கள் தேடியது "உடல் பாகங்கள்"
- கட்டப்பட்டு வரும் தனது வீட்டிற்கு மின்சாதனப் பொருட்களுக்காக எதிர்பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி.
- காவல்துறைக்கு தகவல் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் பெண் ஒருவரின் வீட்டிற்கு மனித உடல் பாகங்கள் கொண்ட பார்சல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பார்சலுடன் ரூ.1.3 கோடி கேட்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாகி துளசி. இவர் க்ஷத்ரிய சேவா சமிதியின் கட்டுமானத்தில் உள்ள தனது வீட்டிற்குப் மின்சாரப் பொருட்கள் பார்சலில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக அவர், க்ஷத்ரிய சேவா சமிதி அமைப்பிடம் நிதி உதவி கோரியுள்ளார். அப்போது அவருக்கு டைல்ஸ் ஓடுகள் வழங்கப்பட்டன. அதேபோல் இம்முறையும் மின் விளக்கு, மின் விசிறி போன்ற மின்சாதன பொருட்களுக்காக துளசி காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், துளசியின் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதில் மின்சாரப் பொருட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துளசி பார்சலை திறந்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் மின்சாரப் பொருட்களுக்குப் பதிலாக மனித உடல் பாகங்கள் இருந்தது.
மேலும், அந்த பார்சலில் ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், பணத்தை வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பார்சல் சம்பவம் துளசியையும் அவரது குடும்பத்தினரையும் பீதியில் ஆழ்த்தியது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பார்சலில் இருந்த மனித உடல் பாகங்கள் சுமார் 45 வயதுடைய நபருடையது எனவும், ஐந்து நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் யூகிக்கப்பட்டது . பிறகு, சம்பந்தப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேற்கு கோதாவரி எஸ்பி அட்னான் நயீம் ஆஸ்மி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். காணாமல் போன நபர்களின் புகார்கள் மூலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Andhra Woman Receives Parcel With Body, ₹1.3 Crore Demand LetterIn a shocking incident, a woman in Yendagandi village, Undi mandal, West Godavari district, received a parcel containing the decomposed body of an unidentified man, along with a letter demanding ₹1.3 crore and… pic.twitter.com/ZOXYCmeRko
— Sudhakar Udumula (@sudhakarudumula) December 20, 2024