search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது.
    • நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

    குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் அரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

    தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்!
    • உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!

    முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் வேளாண்துறையின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பை போற்றும் விதமாக அவரது பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில், இன்று கொண்டாடப்படும் தேசிய விவசாயிகள் தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்!

    இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்! உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்! என கூறியுள்ளார்.



    • பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×