search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேல் ரத்னா"

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார்.
    • கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம் வென்றிருந்தார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற அரிய சாதனை படைத்திருந்தார்.

    கேல் ரத்னா விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் மனு பாக்கர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மனு பாக்கர் மற்றும் அவரது தந்தை மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்- வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே விதிமுறை மனு பாக்கர் அல்லது பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற சிலருக்கு பின்பற்றப்படவில்லை.

    ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோர் பெயர் இடம் பிடித்துள்ளது.

    மனு பாக்கர் விருதுக்காக விண்ணப்பித்துள்ளார். அதனடிப்படையில் கமிட்டி அவரது பெயரை பரிந்துரைந்திருக்க வேண்டும். என்னவாக இருந்தாலும், பெடரேசன் அமைச்சகத்தை அணுகி, அவரது பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மனு பாக்கர் தந்தை ராம் கிஷன் பாக்கர் கூறுகையில் "மனு பாக்கரின் முயற்சியை (efforts) அரசு நிச்சயமாக அங்கீகரிக்க வேண்டும். நான் மனு பாக்கரிடம் பேசினேன். அவள் மனமுடைந்து போனாள். அவர் என்னிடம் "நான் ஒலிம்பிக் சென்று நாட்டிற்காக பதக்கம் வென்றிருக்கக் கூடாது. உண்மையில், நான் ஒரு விளையாட்டு வீரராக ஆகியிருக்கக் கூடாது" என்றார்.

    ஒலிம்பிக்கை தவிர்த்து மனு பாக்கர் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார். டோக்கியோ- பாரிஸ் ஒலிம்பிக் ஆகியவற்றிற்கு இடையில் 17 தங்கப்பதக்கம், 6 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    ×