என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலன் டொனால்டு"

    • இந்திய வீரர்கள் விளையாடினால் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும்.
    • ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் கலந்து கொள்வதை பார்க்க விரும்புவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது,

    எந்த இந்திய வீரர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்திய வீரர்கள் பலரும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×