என் மலர்
நீங்கள் தேடியது "எல்லைப்பாதுகாப்பு படை"
- பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
- ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
ஸ்ரீநகர்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிந்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.
- பஞ்சாப்பில் போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தியது.
- இதில் டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.
சண்டிகர்:
எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக இணைந்து பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உத்தர் தரிவால் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. படையினர் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஹெராயின் போதை பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
இதே அமிர்தசரஸ் மாவட்டத்தில் பச்சிவிந்த் கிராமத்தில் வயல்வெளியில் இருந்து 460 கிராம் எடை கொண்ட ஹெராயினை போலீசார் கைப்பற்றினர். இதேபோன்று, தார்ன் தரன் மாவட்டத்தில் கெம்கரண் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், எல்லைப் பகுதியில் சட்டவிரோத ஆளில்லா விமானம் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சியானது முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.