search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொன்ஸ்டாஸ்"

    • இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது.
    • சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

    இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

    இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்தது.

    இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் வலது பக்கமாக நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

    அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, "இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

    இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    ×